DWHS 12 -1st Mounth our Project
2 nd moun urrent Amount (Update towice 1 day)
1 st 5 Mounth Start Amount
2 nd 5 Mounth Start Amount
3 rd 5 Mounth Start Amount
Last 4 Mounth Start Amount
Duplex Way Help System-12
விண்ணப்பிக்கும் முறை
புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் எமது அமைப்பின் அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஆதரவுடன் ஆரம்பமாகும் எமது 12 வது இரு வழி உதவி முறைமையில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கு
கறுப்புப் பட்டியல்
இச் செயற்றிட்டத்தின் இணையும் ஒவ்வொரு அங்கத்தவர்களும் எமது அமைப்பின் நோக்கம் கருதி செயற்படுவதுடன் நிபந்தனைகளிற்கு உட்பட்டு பெற்றுக்கொள்ளும் நிதிகளை குறித்த காலத்தில் ஒழுங்கான முறையில் மீள செலுத்துதல் வேண்டும். அவ்வாறு மீள செலுத்த தவறும் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள் எமது அமைப்பின் கறுப்பு பட்டியலில் இணைத்து கொள்ளப்படும்.
பிரதான விதிகள்
ஒரு அங்கத்தவர் 500 கனடியன் டொலா (CAD $ 500) 250 கனடியன் டொலர் (CAD $ 250) , 125 கனடியன் டொலர் (CAD $ 125) என்ற அடிப்படையில் விரும்பிய ஒரு தொகையை மாதாந்தம் எமது அமைப்பின் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு சேமிப்பாக வழங்குதல்.
தெரிவு செய்யும் தொகையினை மாதாந்த நிரந்தர தொகையாகவோ அல்லது மாதாந்த கேள்வி முறையில் தீர்மானிக்கப்படும் தொகையாகவோ செலுத்த முடியும்
ஒரு அங்கத்தவர் தெரிவு செய்யும் தொகையை தொடர்ந்து இருபது மாதங்கள் செலுத்துதல் வேண்டும்
அங்கத்தவர்களால் வழங்கப்படும் சேமிப்பின் 20 மாத சேமிப்பு பணமானது ஒரு மாதம் ஒரு அங்கத்தவருக்கு என்ற அடிப்படையில் வழங்கப்படும் அதே வேளை நிதி உதவியை பெற்றுக் கொள்ள விரும்பும் அங்கத்தவர் விதிமுறைகளுக்கு உட்பட்ட கேள்வி முறையின் நிதி உதவியைப் பெற்று கொள்ள முடியும்
மாதாந்தம் ஒரு அங்கத்தவர் என்ற அடிப்படையில் வழங்கப்படும் உதவி தொகையினை பெற விரும்பும் அங்கத்தவர்கள் ஒவ்வொருமாதமும் 02 ம் திகதி 5.00 மணிக்கு கேள்வி முறையில் நேரடியாகவோ தொலைபேசி ஊடாகவோ இணைந்து கொள்ள முடியும் அதே வேளை குறித்த உதவியை பெறும் அங்கத்தவருக்கான உதவித் தொகை அந்த மாதம் 15 ம் திகதி வழங்கும் வகையில் குறித்த சேமிப்பு தொகையினை ஒவ்வொரு அங்கத்தவரும் வழங்குதல் வேண்டும
அனைத்து அங்கத்தவர்களும் பணம் செலுத்தும் செயற்பாடுகளுக்குமான பற்றுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தங்களுக்கான பதிவு படிவங்களில் பதியப்பட்டிருத்தலை உறுதி செய்து கொள்ளல் வேண்டும்.
அங்கத்தவர்களால் வழங்கப்படும் சேமிப்பின் 20 மாத சேமிப்பு பணமானது ஒரு மாதம் ஒரு அங்கத்தவருக்கு என்ற அடிப்படையில் வழங்கப்படும் அதே வேளை நிதி உதவியை பெற்றுக் கொள்ள விரும்பும் அங்கத்தவர் விதிமுறைகளுக்கு உட்பட்ட கேள்வி முறையின் நிதி உதவியைப் பெற்று கொள்ள முடியும்
இம் முறைமையில் இணைந்து குறித்த திகதிகளில் பணம் செலுத்த தவறும் அங்கத்தவர்கள் தாமதக்கட்டணம் செலுத்துதல் வேண்டும்.
குறைந்தது இரண்டு மாதங்கள் தொடர்சியாக பணம் செலுத்தாத அங்கத்தவர் இம் முறைமையில் இருந்து தாமாகவே விலகியவராக கருதப்படுவார்
இம் முறைமையில் இருந்த இடையில் விலகும் அல்லது இடை விலக்கப்படும் அங்கத்தவ செலுத்திய உதவி தொகையை 20 மாதங்களின் பின்னரே பெற்றுக்கொள்ள முடியும்.
அனைத்துச் செயற்பாடுகள் பற்றிய மேலதிக அறிவிப்புக்களும் எமது அமைப்பின் இணையத்தளம் or முகப்புத்தகம் மற்றும் Viber Group இன் ஊடாக அறிவிக்கப்படும
ஐந்து மாதங்களுக்கு மேல் இத் திட்டத்தில் இணைந்து உதவியை வழங்கி வரும் அங்கத்தவர்;கள் தங்களால் வழங்கப்பட்ட தொகையின் 50 வீதத்தினை எமது அமைப்பின் ‘அவசர மற்றும் சிக்கன கடனுதவி சேவை’ செயற்றிட்டத்தின் ஊடாக வட்டி இன்றிய கடனுதவியாக பெற்றுக் கொள்ளமுடியும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது – குறிப்பாக கடனுதவி பெற்றதன் பின்னர் 20 மாத தொகையை பெறும் அங்கத்தவர்களிற்கு கடனாக வழங்கப்பட்டு செலுத்தவேண்டிய நிலவைத் தொகையை கழித்தே பணம் வழங்கபப்டும்)
விசேட நன்மையான இச் சேவையை பெறுபவர்கள் எமது எடைடயபந 2 ஊவைல உடரடி அங்கத்தவராக இருந்து குறைந்தது இரண்டு வருடங்கள் அங்கத்துவ பணம் செலுத்தியவராக இருத்தல் வேண்டும். (‘அவசர மற்றும் சிக்கன கடனுதவி சேவை’ செயற்றிட்டத்தின் விதிகளுக்கு அமைவாக விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து இவ் விசேட உதவியை பெற்றுக் கொள்ள முடியும்)
இச் செயற்றிட்டத்தின் ஊடாக நன்மைகளை பெற்ற பின்னர் தவிர்க்க முடியாத சூழ்நிலையின் போது பணம் செலுத்த முடியாத நிலைக்கு ஆழாகும் சந்தர்ப்பத்தில் எமது அமைப்பின் விசேட உதவித்திட்டத்தின் ஊடாக குறித்த தொகையினை மீள செலுத்துவதற்கு நீண்ட கால அவகாசம்வழங்கப்படும் அல்லது குறித்த கடன் தொகையானது எமது அமைப்பின் ஊடாக மீள செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.